பதிவு செய்த நாள்
07
ஜன
2020
01:01
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடிதிருவேங்கடமுடையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசியைமுன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. பூமி நீளா சமேத திருவேங்கடமுடையான் கோயில் தென் திருப்பதி என்றுஅழைக்கப்படுகிறது. மார்கழி முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாகநடைபெறும். நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று பெருமாள் உபயநாச்சிமாருடன் முத்தங்கி சேவையுடன் காலை 5:00 மணிக்குமூலஸ்தனத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்கவாசல் மண்டபம் முன்புவந்தடைந்தார்.
சொர்க்கவாசல் முன் மண்டபத்தில், பூமி நீள சமேதஸ்ரீனிவாச சுவாமிக்கு சிறப்பு ஆராதனை மற்றும் வேதகோஷம்நடந்தது. தொடர்ந்து காலை 5:45 மணிக்கு சொர்க்கவாசல்திறக்கப்பட்டு, நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கினார். ஏற்பாட்டினை அறங்காவலர் குழு தலைவர் ராமநாதன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்விசெய்திருந்தனர்.
மானாமதுரை:மானாமதுரை வீர அழகர் கோயிலில் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்ஸவர் சுந்தரராஜப் பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியருடன் சன்னதியில் இருந்து சொர்க்கவாசல் கதவுக்கு வந்தடைந்த பின்பு அங்கு தீபஆராதனை காண்பிக்கப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வாருக்கு காட்சி அளித்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவணன், அர்ச்சகர்கள் கோபிமாதவன், பாபுஜி செய்திருந்தனர். மேல்கரை தியாக விநோத பெருமாள், அப்பன் பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது.
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில்வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தை முன்னிட்டு ஆண்டுக்கு ஓரு முறை நடைபெறும் சயன கோல அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். மூலவர் சன்னதி முன் திருமாமணி மண்டபத்தில் பெருமாள் தேவியருடன் சயன கோலத்தில்பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு பெருமாள் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து தாயார், ஆண்டாள் சன்னதியில் எதிர் சேவை நடை பெற்றது. பின்னர் தங்கப்பல்லக்கில் பெருமாள் தேவியருடன் பரமபதவாசல் கடந்து சென்றனர். தொடர்ந்து ஏகாதசி மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி ஆழ்வாருக்கு மரியாதை நடந்தது. பின்னர் பத்தி உலாத்துதல், தென்னைமரத்து வீதியில் பெருமாள் வலம் வந்தார். தொடர்ந்து தாயார் சன்னதிக்கு பெருமாள் எழுந்தருளி ராப்பத்து, உற்ஸவம் துவங்கியது. இன்று முதல் தினசரி மாலையில் பெருமாள் பரமபதவாசல் கடந்தருள்வார். ராப்பத்து பத்தாம் நாளில் நம்மாழ்வார் திருவடி தொழுதலுடன் மார்கழி உற்ஸவம் நிறைவடையும்.
*திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறந்து மூலவர் யோக நிலையில் உள்ள மகா விஷ்ணுவிற்கு அபிஷேகம் நடந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருநாள் மண்டபத்தில் எழுந்தருளிய உற்ஸவருக்கு அபிஷேக, ஆராதனை முடிந்து ஸ்ரீதேவி,பூதேவியருடன் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை 6:30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் தேவியருடன் கடந்தார். *திருப்புத்துார் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள், தேவியருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காலை 10:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் தேவியருடன் பிரவேசித்தார்.