பதிவு செய்த நாள்
26
ஏப்
2012
10:04
நகரி: திருப்பதி கோவில் உண்டியலில் கிடைக்கும் தங்க நகைகளை கணக்கிடும் போது தினமும், 2.5 கிலோ நகைகள் காணிக்கையாகக் கிடைத்து வருவது தெரியவந்தது. திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு, பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் நகைகளின் காணிக்கை குறையாமல் இருந்து வருகிறது.உண்டியல் மூலம், ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தினமும் காணிக்கையாக, 2 கிலோ, 800 கிராம் வரை கிடைத்து வந்தது. கடந்த ஆண்டிலும் தினமும், 2 கிலோ, 530 கிராம் வரை கிடைத்தது. கடந்த ஐந்தாண்டுகளில் ஒப்பிடும் போது சராசரியாக தினமும், 2 கிலோ, 530 கிராம் தொடர்ந்து உண்டியலில் கிடைத்து வருகிறது.தங்க பிஸ்கட்கோவில் உண்டியலில் கிடைக்கும் தங்கத்தை, தேவஸ்தான நிர்வாகம் தங்க பிஸ்கட்டுகளாகத் தயாரித்து அவற்றை 6 சதவீதம் வட்டி என்ற கணக்கில் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறது. தங்கத்திற்கு வட்டியாக தங்கத்தையே வரவு வைக்கும் ஒப்பந்தப்படி வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆயிரம் கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதன் மதிப்பிற்கு ஆண்டுக்கு, 60 கிலோ எடை தங்கம் வட்டியாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு கிடைத்து வருகிறது.இத்தகவலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.