போடி : பிரதோஷத்தை முன்னிட்டு போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில், கவுரிசங்கர் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தலைவர் திவாகரன் தலைமை வகித்தார். செயலாளர் மனோகரன், பொருளாளர் பாலமுருகன், துணைத் தலைவர் குமரேசன், துணை செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். அலங்காரங்களை அர்ச்சகர் சரவணன் செய்திருந்தார். போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, நடந்தது. சிறப்பு அலங்காரத்தை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார். போடி பரமசிவன் கோயிலில் சிறப்பு பூஜை அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது.மேலச்சொக்கநாதர் கோயில், போடி சுப்பிரமணியர் கோயில், வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.