பதிவு செய்த நாள்
09
ஜன
2020
11:01
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, மார்கழி மாத, வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் கொடிமரத்தின் அருகில் உள்ள, அதிகார நந்தி, சுவாமி கருவறை எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் உள்ள பெரிய நந்தி, உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், பால், பன்னீர், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, சந்தனம், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, பல்வேறு வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து, கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில், பிரதோஷ நாயகர், ரிஷப வாகனத்தில், வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.