கூடலுார்: சபரிமலையில் மகரஜோதி விழாவிற்காக பல்வேறு பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் வந்தபடி உள்ளனர். தற்போது பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் அவர்கள் விபத்தில் சிக்காமல் தவிர்க்க கூடலுார் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் ,லோயர்கேம்ப் மலைப்பாதையின் துவக்கப்பகுதியில் அவர்களது பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். ரோட்டோரங்களில் நடந்து செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்புகின்றனர்.