பதிவு செய்த நாள்
09
ஜன
2020
12:01
திருப்பூர் மாவட்டம் ருத்திராபாளையத்தில் இருந்து சபரிமலைக்கு 18 ம் ஆண்டாக பாதயாத்திரையாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க மூணாறு வந்தனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள ருத்திராபாளையத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், மகரஜோதி பாதயாத்திரை குழு என்ற பெயரில் சபரிமலை சென்று வருகின்றனர் குருசாமி துரைவேலுச்சாமி வழி நடத்துகிறார்.
இக்குழுவைச் சேர்ந்த 24 பக்தர்கள், ருத்திராபாளையத்தில் இருந்து 18 ம் ஆண்டாக ஜன.,4ல் பாதயாத்திரையை துவக்கினர். அவர்கள் நேற்று முன்தினம் மாலை மூணாறு வந்தடைந்தனர்.
பயணத்தில் ருத்திராபாளையத்தில் இருந்து உடுமலைபேட்டை, மறையூர், மூணாறு, அடிமாலி, நேரியமங்கலம், தொடுபுழா, ஈராட்டுபேட்டை, காஞ்சிராபள்ளி, எரிமேலி சென்று பெருவழிப்பாதை வழியாக 340 கி.மீ., துாரத்தை 11 நாட்களில் கடந்து ஜன., 14ல் சபரிமலை சென்றடைகின்றனர்.
குருசாமி துரைவேலுச்சாமி 39 ஆண்டுகள் சபரிமலை சென்றுள்ளார். இக்குழுவில் கன்னிச்சாமி முதல் 18 ஆண்டு வரை சபரிமலை சென்ற பக்தர்கள் உள்ளனர்