வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு தாணிப்பாறையில் குவிந்த பக்தர்கள் வனத்துறையினரின் சோதனைக்கு பிறகு மலையேற துவங்கினர். சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த வழிபாட்டில் 500க்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன், அலுவலர்கள் செய்திருந்தனர். ஜன.11 வரை பக்தர்கள் அனுமதிக்கபடுகிறார்கள்.