குமாரபாளையத்தில், பல்வேறு கோவில்களில் மார்கழி மாத பஜனை மற்றும் திருவீதி உலா நடந்து வருகிறது. மார்கழி மாதத்தையொட்டி, குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், தட்டான்குட்டை புருஷோத்தம பெருமாள் கோவில், தம்மண்ணன் தெரு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தினமும் பஜனை நடந்து வருகிறது. தம்மண்ணன் தெரு மாரியம்மன் கோவில் பஜனை குழுவினர், பக்தி பாடல்களை பாடியவாறு வீதிகள் வழியாக திருவீதி உலா வருகின்றனர். வழி நெடுக பக்தர்கள் தண்ணீர் ஊற்றி பாதபூஜை, பஜனை குழுவினரிடம் பிரசாதம் பெற்று செல்கின்றனர்.