செஞ்சி: செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. செஞ்சி பீரங்கிமேட்டில் உள்ள அபித குஜலாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு அருணாசலேஸ்வரர் அதற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 5 மணிக்கு உற்சவர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும், சாமி கோவில் உலாவும் நடந்தது. சாமிக்கு நெய்வேதியம் செய்யப்பட்ட களி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.