Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பெண்களால் நன்மை கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) காத்திருக்கு புதிய பதவி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) காத்திருக்கு புதிய பதவி

பதிவு செய்த நாள்

13 ஜன
2020
05:01

மகர ராசி அன்பர்களே!

ராகுவால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். இந்த மாதம் சுக்கிரன் பிப்.4ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். மேலும் செவ்வாயால் பிப்.9 வரை நற்பலன் கிடைக்கும். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார்.  ராகுவால் முயற்சிகளில் வெற்றி சேரும். அண்டை வீட்டாரின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. சிலர் புதிய பதவி கிடைக்கப் பெறுவர்.

சுக்கிரனால் பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். புதனால் ஜன.22 வரை வீட்டில் பிரச்னை குறுக்கிடலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். சுக்கிரனால் பிப்.4 க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்..

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். ஜன.22 வரை அக்கம் பக்கத்தினருடன் கருத்து வேறுபாடு வரலாம். பிப்.6க்கு பிறகு நிலைமை சீராகும்.  சகோதர வழியில் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு  புதிய பதவி தேடி வரும். வெளியூரில் தங்கும் சூழல் ஏற்படலாம். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.

உடல்நலம் சிறப்பாக இருக்கும்.  ஆனால் அவ்வப்போது சூரியனால் அலைச்சல் ஏற்படும். பயணத்தின் போது கவனம் தேவை. செவ்வாயால் பிப். 9க்கு பிறகு  பொருள் விரயம் ஏற்படலாம்.

சிறப்பான பலன்கள்

* தொழில், வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
* தரகு, கமிஷன் தொழிலில் தடைகளை முறியடித்து வெற்றி காணலாம். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.
* அரசு பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் கடனுதவி எளிதில் கிடைக்கும்.
* ஐ.டி., துறையினர் பிப்.4க்கு பிறகு பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை பிப்.9 க்குள் கேட்டு பெறவும்.
* அரசியல்வாதிகள் நற்பலனை எதிர்நோக்கலாம். புகழ், கவுரவம் மேலோங்கும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க தருணம் வந்து விட்டது. பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.

சுமாரான பலன்கள்

* வியாபாரிகள் தவிர்க்க முடியாத வெளியூர் பயணத்தால் உடல் நலக்குறைவுக்கு ஆளாகலாம்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வீண் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் திடீர் இடமாற்றம் காணலாம். ஜன. 22க்கு பிறகு செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம்.
* மருத்துவர்கள் அக்கறையுடன் பணியாற்றவும். முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* வக்கீல்கள் சிலர் மனக்கவலை கொள்ள நேரிடும். வாடிக்கையாளரை தக்க வைக்க கடின முயற்சி தேவைப்படும்.
* ஆசிரியர்கள் பலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.  வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரணையுடன் நடக்கவும். ராகுவால் இடையூறுகளை எளிதில் முறியடிப்பீர்கள்.
* தொழிலதிபர்களுக்கு  போட்டியாளர்களால் ஏற்பட்ட முட்டுக் கட்டைகள் விலகும்.
* தரகு, கமிஷன் தொழிலில் மறைமுக போட்டி உருவாகலாம். எனவே அவர்கள் மீது ஒரு கண் இருப்பது நல்லது.
* விவசாயிகளுக்கு  கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
* மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஜன.22க்கு பிறகு அவப்பெயர் வரலாம். நட்பு விஷயத்தில் கவனம் தேவை.

பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய வழிபாடு
* சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள்தீபம்
* திங்களன்று சிவன் தரிசனம்

* நல்ல நாள்:  ஜன.18,19,20,21,24,25,26,29,30,31, பிப்.6,7,8,9
* கவன நாள்: ஜன.15, பிப்.10,11 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,5
* நிறம்: வெள்ளை, நீலம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar