பதிவு செய்த நாள்
13
மார்
2026
10:03
விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். கர்மக்காரகன் சனி, ராசிநாதன் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலைப்பளு கூடும் எந்த ஒரு வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்க முடியாமல் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்கள், செய்துவரும் தொழிலில் முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். என்றாலும் ஏப். 6 முதல் உங்கள் தன குடும்பாதிபதி புதன் 8ம் இடம் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். முடியாமல் இருந்த வேலைகளை முடிக்க முடியும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் தடைகள் விலகும். பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உருவாகும். ஜென்ம ராசிக்குள் ஞான மோட்சக்காரகன் கேது ராசிக்குள் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். கூட்டுத்தொழிலில் இருந்த ஒற்றுமையை வேற்றுமையாக்குவார். வீண் செலவுகளையும் அதிகரிப்பார். புதிய நட்புகள் வழியே சங்கடங்களை ஏற்படுத்துவார். அஷ்டம கிரகங்கள் கஷ்டங்களை அதிகரிக்கும் என்பதால் பெண்கள் தங்கள் உடல்நிலையில் கவனமாக இருப்பதும், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் நன்மையளிக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் குடும்ப ரகசியங்களையும் விவகாரங்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மாணவர்கள் பொதுத்தேர்வில் கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: மார்ச் 19.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16, 25, 28. ஏப். 1, 7, 10.
பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும். பயம் நீங்கும்.
நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதமாகும். அதிர்ஷ்டக்காரகனும், உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியுமான சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்களிடமும் ஒரு தெளிவு இருக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை உயரும். மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய இடம், வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிறருக்கு கொடுத்து உதவிடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலைமை உயரும். என்றாலும் ராசிநாதன் சூரியன் கர்மக்காரகன் சனியுடன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் வேண்டும். உங்களுக்கான எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதைப் பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்துகொள்வது நன்மையாகும். சனி பகவானின் பார்வைகள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஜீவன ஸ்தானத்தையும் பார்ப்பதால் செய்து வரும் தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வது நன்மைதரும். உறவினர்களால் சில நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பேச்சிலும் வார்த்தைகளிலும் நிதானம் தேவை. பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். ஏப். 6 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியுண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 20.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 19, 24, 28. ஏப். 1, 6, 10.
பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.
எந்த ஒன்றிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். ராசிநாதன் சூரியனும், கர்மக்காரகன் சனியும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கினாலும், மார்ச் 17 முதல் குரு பகவான் லாப ஸ்தானத்தில் வக்கிர நிவர்த்தி அடைவதால், உங்களுக்கேற்பட்ட சங்கடங்கள் விலகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இளைய சகோதரருடைய ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பிள்ளைகள் பெருமை அடையக்கூடிய நிலை உருவாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வேலையின் காரணமாக கணவன் ஓரிடம், மனைவி ஓரிடம் என்று வாழ்ந்து வந்த நிலைமாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் சங்கடங்கள் முடிவிற்கு வரும். சேமிப்பு உயரும். புதிய சொத்து சேரும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 21.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19, 28. ஏப். 1, 10.
பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.