Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: பங்குனி ராசி பலன் மிதுனம் : பங்குனி ராசி பலன் மிதுனம் : பங்குனி ராசி பலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
ரிஷபம் : பங்குனி ராசி பலன்
எழுத்தின் அளவு:
ரிஷபம் : பங்குனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 மார்
2026
10:03

கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் முடிவிற்குவரும். கொடுத்த பணம் வரவில்லை, போட்ட முதலில் லாபமில்லை என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் நிலை மாறும். புதிய சொத்து, வாகனம் என்ற கனவுகள் நனவாகும். பத்தாமிட சனியால் இரண்டரை ஆண்டுகளாக இருந்த நெருக்கடிகள் எல்லாம் முடிவிற்கு வரும். மங்களக்காரனான குரு பகவானும் இரண்டாம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கையில் பணம் புழங்கும். கடன் தொல்லை விலகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். நோய் நொடி எதிர்ப்பு என்று சங்கடப்பட்டு வந்த நிலையெல்லாம் மாறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள், வர்த்தகம் சாதகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: ஏப். 8.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 19, 24, 28. ஏப். 1, 6, 10.


பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட தொல்லைகள் யாவும் விலகும்.


ரோகிணி

எந்த ஒன்றையும் அலசி ஆராய்ந்து முடிவிற்கு வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். நடைபெற்ற சனிப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இதுநாள்வரை தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரம் லாபம் தரும். வேலையில் இருந்த பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் இருந்த பயம் நீங்கும். சிலருக்கு தகுதிக்கேற்ற வேலைக் கிடைக்கும். வருமானம் உயரும். ஆத்ம காரகனான சூரியனும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இதுவரை இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஏப்.1 முதல் செவ்வாயும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.  முடங்கிக்கிடந்த தொழில்கள் மீண்டும் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் வாழ்வில் இந்த மாதம் யோகமாக இருக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்குவரும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் என்று சேரும். வியாபாரிகளுக்கு வருமானத்திற்குரிய வழிகள் தெரியும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: ஏப். 9.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15. 20, 24, 29. ஏப். 2, 6, 11.


பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். சங்கடங்கள் விலகும்.


மிருகசீரிடம் 1, 2 ம் பாதம் 


துணிச்சலாக எந்த ஒரு வேலையிலும் இறங்கி அதில் வெற்றி அடையும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். தைரிய வீரிய பராக்கிரம காரகனான செவ்வாய் ஏப். 1 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்யக்கூடிய அளவிற்கு வசதி வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கி வந்த கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். உங்கள் தன குடும்ப வாக்காதிபதி புதன் ஏப். 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கையில் பணப்புழக்கம் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். புதிய சொத்து சேரும். வியாபாரிகளுக்கு கிடைக்காமல் இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். முந்தைய மாதங்களை விட இந்த மாதத்தில் உங்களுக்கு அதிகபட்சமான நன்மைகள் நடந்தேறும். இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு செல்வாக்கை உயர்த்துவார். வரவையும் வசதி வாய்ப்புகளையும் அதிகரிப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர்கள் பலமும், தலைமையின் ஆதரவும் வெற்றிநடை போடவைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களைப் பார்த்து பிறர் ஆச்சரியப்படும் அளவிற்கு கடந்த கால சங்கடங்களில் இருந்து மீண்டு வருவீர்கள். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் உருவாகும். பெண்களுக்கு உடல்நிலை சீராகும். குடும்பத்தில் மரியாதை கூடும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: ஏப். 10.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 24, 27. ஏப். 6, 9.


பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட நன்மை உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்அறிவாற்றலுடன் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar