Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : மாசி ராசி பலன் ரிஷபம் : பங்குனி ராசி பலன் ரிஷபம் : பங்குனி ராசி பலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
மேஷம்: பங்குனி ராசி பலன்
எழுத்தின் அளவு:
மேஷம்: பங்குனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 மார்
2026
10:03

மேஷம்


அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதமாகும். ஞான, மோட்சக் காரகனான கேது ஐந்தாம் இடத்தில், விரய ஸ்தானத்தில் சனி பகவான், பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சஞ்சரித்தாலும், ராசிநாதன் செவ்வாய் ஏப். 1 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தைரியம் கூடும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். மாதத்தின் தொடக்கத்தில் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைவதால் அவருடைய பார்வைகளால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். புதிய இடம் வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பொறுப்பு உண்டாகும். இக்காலத்தில் மருத்துவ செலவுகளுக்கு வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் பிரச்னைக்கு இடமில்லாமல் போகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நன்மை அளிக்கும்.

சந்திராஷ்டமம்: ஏப். 5, 6.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16, 18, 25, 27. ஏப். 7, 9.


பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


பரணி

உழைப்பால் உயர்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். நவீன பொருட்கள், வாகனம் என்று வாங்க முடியும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த இடைவெளி விலகும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரய ஸ்தானத்தில் சனி, சூரியன் சஞ்சரித்தாலும் மாதம் முழுவதும் யோகக்காரன் ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவிற்கு குறைவிருக்காது. நெருக்கடிகள் ஏற்படாது. நினைத்ததை உங்களால் நினைத்தபடி நடத்திக் கொள்ளமுடியும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். முடங்கிக் கிடந்த தொழில்களும் முன்னேற்றம் அடையும்.  ஏப். 6 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிம்மதியான நிலை உருவாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். ஏப். 1 முதல் ராசி நாதன் செவ்வாயும் விரய ஸ்தானத்திற்கு செல்வதால் வரவு செலவில் எச்சரிக்கையாக இருப்பது நன்மை அளிக்கும். வாகனப்பயணத்தில் சாகசங்களுக்கு இடம் கொடுக்காமல் நிதானம் காப்பது அவசியம். புதிய முதலீடுகள் செய்வதற்கு நன்றாக யோசிக்கவும். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வோர் ஏற்ற, இறக்க நிலைகளை அறிந்து முதலீடு செய்வது அவசியம். மேலதிகாரியின் உத்தரவின்படி செயல்படுவதால் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். மாணவர்கள் படிப்பைத்தவிர வேறு சிந்தனைக்கு இப்போது இடம் கொடுக்க வேண்டாம்.

சந்திராஷ்டமம்: ஏப். 6, 7.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 24, 27. ஏப். 6, 9.


பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடங்கள் விலகும். 


கார்த்திகை 1 ம் பாதம்: முயற்சியால் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். விரய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பல வகையிலும் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவும் இழுபறியாகும். உழைப்பு, அலைச்சல் என்று மனம் வேதனையில் மூழ்கும். ஒவ்வொரு வேலையிலும் கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்கும். ஏப். 1 முதல் ராசி நாதன் செவ்வாயும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரிகள் விற்பனை,  முதலீட்டில் கவனமாக இருப்பது நன்மையாகும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல வகையிலும் வேலை பளு கூடும். உடல்நிலையில் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். எதிர்பாராத செலவுகள், தேவையற்ற முதலீடுகள், ஏமாற்று விளம்பரங்களால் கையிருப்பு கரைய வாய்ப்பிருப்பதால் பண விவகாரத்திலும். கொடுக்கல், வாங்கலிலும் நிதானம் காப்பது இந்த நேரத்தில் அவசியம். என்றாலும் மங்களக் காரகன் குருபகவான் மார்ச் 17 முதல் 7, 9, 11 ம் இடங்களைப் பார்ப்பதால் நண்பர்களால் ஆதாயம், வாழ்க்கைத் துணையின் ஆதரவு, பெரியோரின் உதவி என்று உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சியும் வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். மாணவர்களுக்கு இது முக்கியமான காலம் என்பதால் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம்.

சந்திராஷ்டமம்: ஏப். 7, 8.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 19, 27, 28. ஏப். 1, 9, 10.


பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட்டுவர வாழ்வில் நன்மை உண்டாகும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்அறிவாற்றலுடன் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar