பதிவு செய்த நாள்
17
ஜன
2020
12:01
திருச்சி: மணப்பாறை அருகே நடந்த ஞானரதம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருச்சி, மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தில் ஆண்டுதோறும், மாட்டுப்பொங்கல் அன்று ஞானரத ஊர்வலம் நடக்கும். பாறைப்பட்டி, மாலைக்காட்டுப்பட்டி என, 18 கிராமங்களைச் சரே்ந்த பொதுமக்கள் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் இந்த ஊர்வலம் நடத்தப்படும். அதன்படி நேற்று பாறைப்பட்டியில் துவங்கிய ஞானரத ஊர்வலம், புத்தாநத்தம் வந்தது. அங்கு காளியம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின் மதியம் புறப்பட்ட ஊர்வலம், புத்தாநத்தம் கடை வீதி வழியாக, இடையப்பட்டியில் இருக்கும் ஞானவேல் மலைக்கு சென்றது. அங்கு கிரிவலம் நடந்து, முருகனுக்கு சிறப்பு அலங்காரத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாற்று மதத்தினர் இருக்கும் பகுதிகள் வழியாக ஊர்வலம் நடந்ததால், அசம்பாவிதத்தை தவிர்க்க, திருச்சி எஸ்.பி., ஜியாவுல் ஹக் தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.