பதிவு செய்த நாள்
19
ஜன
2020
08:01
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் உள்ளே சென்றதாகதகவல் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த, காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி, உடனடியாக கோவிலை சுற்றிபார்வையிட்டார். தொடர்ந்து, கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அமைக்க உத்தரவிட்டார்.இதேபோல், காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், கைலாசநாதர் என, நான்கு கோவில்களுக்கும், போலீஸ் பாதுகாப்புஅளிக்கப்பட்டு உள்ளது.காமாட்சி அம்மன் கோவில் நான்கு ராஜகோபுர வழிகளிலும் போலீசார் பாதுகாப்பில் உள்ளனர் கோவிலுக்கு பைகளுடன் செல்லும் பக்தர்கள், பரிசோதனைக்கு பின்னரே, உள்ளே செல்ல அனுமதிக்கப் படுகின்றனர்.அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பயங்கரவாதிகளாக இருக்கலாம். ஆதலால், மறு உத்தரவு வரும் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என, போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.இந்நிலையில், பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.