பதிவு செய்த நாள்
27
ஏப்
2012
10:04
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் உண்டியல், நேற்று திறந்து எண்ணப்பட்டது. இரண்டு பெரிய உண்டியல்கள் மூலம், ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 50 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு, இரண்டு பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள், மூன்று மாதத்திற்கு ஒருமுறை, ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் திறந்த காணிக்கை எண்ணப்படும். நடப்பாண்டு தேர்த்திருவிழா முடிந்தநிலையில், நேற்று, இரண்டு பெரிய உண்டியல்களும் திறக்கப்பட்டன. தர்மபுரி ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். அறநிலையத்துறை ஆய்வாளர் பாண்டியம்மாள், செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், உண்டியல் எண்ணும் பணி நடந்தது. ஹிந்து முன்னணி தொண்டர்கள், ஐ.டி.ஐ., மாணவர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள், 20க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த முறை தேர்த்திருவிழா முடிந்து எண்ணப்பட்டதால், அதிக காணிக்கை பணம் கிடைக்கும், என பக்தர்கள் எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு உண்டியல்களிலும், ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 50 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர்.