பதிவு செய்த நாள்
27
ஏப்
2012
10:04
தர்மபுரி: தர்மபுரி தாலுகா முக்கல்நாயக்கம்பட்டி, ராஜாதோப்பு ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜபெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று (27ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு, அனுங்கை விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம் புண்யகவாஜனம், சோடகணபதி ஹோமம், ஹோடச லட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, சலகர்சனம் முதல் காலய யாக பஜஜை, திரவியா ஹிதி, மஹாபூர்ண ஹுதி, சோட உபகர பூஜை, சதுர்வேத பாரயணம், மஹா தீபாரதனை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு மேல் மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது. இன்று காலை 5 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜையும், காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் யாத்திர தானம், திருகுடம் புறப்பாடு, வடிமான கோபுரம் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் மஹா கும்பாபிஷேகம் மற்றும் மரியம்மன், பரசு ராம ஸ்வாமிக்கு திருகுடம் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, ஸ்வாமிக்கு ராஜா அலங்காரம் செய்து, பெருமாள் விஷ்ணு சகாய்ர நாம அர்ச்சனை. 1,008 அர்ச்சனை, தசதரிசனம், தசதானம், மஹா மங்கள தீபாராதனையும், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. காலை 8.30 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு மேல் கிருஷ்ணன் பிறப்பு நாடகமும், நாளை இரவு 8 மணிக்கு கலை நிகழ்ச்சியும், 29ம் தேதி முதல் 3ம் தேதி வரையில் தினம் இரவு 8.30 மணிக்கு சின்னசாமி குழுவினரின் நாடகம் நடக்கிறது. யாக சாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை அதியமான்கோட்டை தட்சண காசி கால பைரவர் கோவில் குருக்கள் கிருபாகரன் முன்னின்று நடத்துகிறார். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.