பழநி பாதயாத்திரை பக்தர்கள் அதிகரிப்பு: அலட்சிய ஏற்பாடுகளால் அலைக்கழிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2020 11:01
கன்னிவாடி : பழநி பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள சூழலில், கோயில், போலீஸ், உள்ளாட்சி நிர்வாகங்களின் அலட்சியத்தால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட வெளிமாவட்ட பக்தர்களும் அதிகளவில் பழநிக்கு செல்கின்றனர். மெட்டூர்- - பலக்கனுாத்து ரோடு வழியே தைப்பூச விழாவுக்கு பின்னும் பங்குனி உத்திரம் வரை பக்தர்களின் வருகை இருக்கும்.பாதயாத்திரையின்போது கொடைரோடு, செம்பட்டி, கன்னிவாடி பகுதிகளில், பகலில் ஓய்வெடுக்கும் பக்தர்கள், நள்ளிரவு முதல் அதிகாலை வரை பாதயாத்திரை மேற்கொள்வர். இந்த பக்தர்களுக்கு அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள், போலீசார் மட்டுமின்றி பழநி கோயில் நிர்வாகமும் வசதிகளை ஏற்படுத்தி தருவர். ஆனால் அந்த அமைப்புகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.