பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பு வசதிக்காக 100 கி.மீ., தொலைவுகக்கு ரோட்டோரம் 50 ஆயிரம் டியூப் லைட் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பழநியில் தைப்பூச விழா பிப்.2 ல் துவங்கி பிப்.11., வரை நடக்கிறது. இதையொட்டி கடந்த சில வாரங்களாகவே பாதயாத்திரை பக்தர்கள் அதிகளவில் பழநி வரத்துவங்கிவிட்டனர். திண்டுக்கல் - பழநி வரை இப் பக்தர்களுக்காக ரோட்டோரம் பேவர் பிளாக் கற்களால் 63 கி.மீ., நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் வசதிக்காக ரோட்டோரங்களில் தற்காலிக தங்கும் குடில்கள் அமைக்கப்படுகிறது. பக்தர்கள் இரவில் தங்கிவிட்டு அதிகாலை முதல் நடந்து செல்வதுவழக்கம். மதுரை, நத்தம், கோவை, தாராபுரத்தில் இருந்து திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியே பழநி செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்குபாதுகாப்பிற்காக 100 கி.மீ.,க்கு 50 ஆயிரம் டியூப் லைட் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் இரவில் நடந்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தும் அதிகாலையில் யாத்திரையை துவங்கும் பக்தர்களுக்காக ஒளிரும் பட்டைகள், குச்சிகள்போலீசார் சார்பில் வழங்கப்படுகிறது.இவர்களின் பாதுகாப்புக்காக இரவு ரோந்து பணியில் 50 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.