Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருமுருகனின் திருவிளையாடல்! திருமுருகனின் திருவிளையாடல்!
முதல் பக்கம் » அருணகிரிநாதர்
அருணகிரியை ஆட்கொண்ட ஆறுமுகன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஏப்
2012
15:52

திருவண்ணாமலை கோபுரம் வா வா என அவனை அழைப்பதுபோல் தோன்றியது. கோபுரத்தை நோக்கித் தன்னிச்சையாக நடந்தன அவன் கால்கள். செல்லும் வழியெல்லாம் பற்பல தாசி வீடுகள். அவன் பார்க்காத தாசி வீடா? அவர்கள் அவரவர் வீட்டு வாசலில் வாடிக்கையாளரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். காசில்லாத இவன் பிச்சைக்காரனைப் போல் நடந்துசெல்வத்தைப் பார்த்து அவர்கள் ஒருவருக்கொருவர் ஜாடை செய்து கிளுக் எனச் சிரித்தார்கள். அவர்களின் கேலிச் சிரிப்பு அருணகிரி காதுகளில் விழத்தான் செய்தது. ஏற்கெனவே நொந்திருந்த அவன் மனம் தாசிகளுடனான வாழ்வு இவ்வளவுதான் என்றறிந்து, மேலும் நொந்தது.

தன்மேல் உயிரையே வைத்து தனக்காகக் காசை ஒரு பொருட்டாகக் கருதாத தன் அக்காவின் தூய பாசம் எங்கே? காசைத் தவிர வேறு சிந்தனையே இல்லாத இந்த தாசிகளின் அற்பமான மோகம் எங்கே? அக்காவின் உன்னதப் பாசம் தன்னை வளர்த்து ஆளாக்கி கோபுர உயரத்தில் ஏற்றியது. தாசிகளின் தொடர்போ தன்னை அதலபாதாளத்தில் தள்ளி, தனக்குத் தொழுநோயைத் தான் பரிசாகத் தந்தது. அவன் பின்னால் கணிகையரின் ஏளனச் சிரிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க, அவன் அதன் ஒலியில் கூனிக் குறுகி நடந்துகொண்டே இருந்தான். வா வா என்று தன்னை அழைத்த கோபுரத்தை நோக்கி நடந்தான். இனி இத்தனை அவமானங்களைச் சுமந்துகொண்டு வாழத்தான் வேண்டுமா என்று அவன் மனம் சிந்தித்தது. என் அன்னை முத்தம்மையின் மனத்தில் பக்தியை விதைத்த முருகா! என்னை ஏன் கைவிட்டாய்? சீரழிந்து கெட்டதெல்லாம் போதும். பாவம் செய்த இந்த உடல் இனி எனக்கு வேண்டாம். விறுவிறுவென நடந்து அண்ணாமலையின் கோயிலின் வல்லாள ராஜன் கோபுரத்தின் உச்சியில் ஏறினான் வாலிபன் அருணகிரி. வீட்டிலிருந்த அக்கா ஆதி சிறிதுநேரம் சிந்தித்தாள். தம்பி தளர்ந்த நடையோடு சென்றது அவள் கண்ணில் நின்றது. அவனுக்கு புத்தி வந்திருக்கும் என்றே நம்பினாள். ஆனால் அவன் முகத்தில் தென்பட்ட அதிர்ச்சியும் சோர்வும் அவளை யோசிக்க வைத்தன. ஏதாவது விபரீதமான முடிவுக்கு அவன் வந்துவிட்டால்? அவனை இழந்து அவளால் வாழ முடியுமா? திடீரென எழுந்த உணர்வெழுச்சியோடு அவன் மனத்தில் எழக்கூடிய முடிவை ஊகித்தவளாய் தம்பீ தம்பீ என்று கதறியவாறே அவள் திருவண்ணாமலைத் தெருக்களில் ஓடினாள். கோபுரத்தின் உச்சியைத் நோக்கித் தம்பி ஏறுவதைப் பார்த்தாள். தம்பீ வேண்டாம், என்னை விட்டுப் போய்விடாதே! என்று அலறியவாறே அதே கோபுரத்தை நோக்கி ஓடலானாள். அக்காவின் கூக்குரல் அவன் செவியில் விழுந்ததாய்த் தெரியவில்லை. விழுந்தாலும் அதை அவன் லட்சியம் செய்து தன் முடிவை மாற்றிக் கொள்வான் என்றும் தோன்றவில்லை. கோபுர உச்சியில் அவனைச் சுற்றி ஏராளமான தாசிகள் நின்று கைகொட்டிச் சிரிப்பதுபோல் பிரமை தோன்றியது அவனுக்கு. முருகா! என் அன்னை முத்தம்மைக்கு அருள்புரிந்த கடவுளே! என்னையும் ஏற்றுக்கொள்! என் எல்லாத் தவறுகளையும் மன்னித்துவிடு! என்றவாறே.

ஆ! என் தம்பி என்ன செய்கிறான் இப்போது? கோபுரத்தின் மேலிருந்து குதித்தால் உடல் பொடிப்பொடி ஆகிவிடுமே? எலும்பு கூடக் கிடைக்காதே? முருகா! என் தாயான உன் பக்தை முத்தம்மைமேல் ஆணை! என் தம்பியைக் காப்பாற்று! ஆதி உரத்த குரலெடுத்து அலறினாள். அதற்குள் அந்த விபரீதம் நடந்தே விட்டது. அருணகிரி கோபுர உச்சியிலிருந்து சடாரெனக் குதித்தே விட்டான். கீழே விழும் எந்தப் பொருளையும் இழுக்கும் இயற்கையான புவிஈர்ப்பு விசை அவனையும் இழுத்தது. செங்குத்தாக அவன் மண்ணை நோக்கி விழுந்துகொண்டிருந்தான். அவன் மேனி தரையை எட்டித் தூள்தூளாகப் போகிற நேரம். இதென்ன! ஆயிரம் கோடி நிலவுகள் சேர்ந்தாற்போல் ஒரு குளுமையான வசீகர ஒளி வானில் தோன்றுகிறதே! அந்த ஒளி சரசரவென ஒருங்கிணைந்து பன்னிரண்டு தாமரைப் பூங்கரங்களாக மாறுகிறதே! அருணகிரி அந்த ஆச்சரியத்தை அனுபவித்தவாறே திகைத்திருந்தான். பன்னிரண்டு கரங்களும் அவன் தேகத்தை அப்படியே பூப்போல் தாங்கிக் கொண்டன. மெல்ல ஒரு சின்னச் சிராய்ப்பும் இல்லாமல் அவனை அவை பத்திரமாக மண்ணில் புல்வெளியில் கிடத்தின. பின்னர் அந்தக் கரங்கள் மீண்டும் ஒளியுருவம் பெற்று விண்ணில் மறைந்தன. முருகனின் பன்னிரு அருட்கரங்களால் தீண்டப்பெற்ற அருணகிரியை இனி நாம் அவன் என்று எப்படி அழைப்பது? முருகனது பக்தராக அருணகிரியார் புதுப்பிறவி எடுத்துவிட்டார். விழுந்த நிலத்திலிருந்து எழுந்து மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டார் அருணகிரிநாதர். தன் மேனியை வியப்போடு பார்த்துக் கொண்டார். முருகனைத் தொழுததால் அவரது தொழுநோய் முற்றிலுமாக மறைந்திருந்தது. அவரது மேனி முழுமையான ஆரோக்கியத்துடன் பொன்வண்ணத்தில் புதுப்பொலிவு பெற்று ஒளிவீசியது.

என்னைக் காத்தருளிய கந்தா! எனக்குக் காட்சி தரலாகாதா? அவர் விம்மினார். அடுத்த கணம் ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்ட கந்தக் கடவுள் கோலமயில் வாகனனாய் அவர் முன் தோன்றினான். ஜல் ஜல் எனக் கால் கொலுசுகள் ஒலிக்க, அவரை நோக்கி நடந்து வந்தான். அருணகிரிநாதரின் நெற்றியில் திருநீறு பூசினான். காதருகே வந்து சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரத்தை அவருக்கு உபதேசித்தான் ஆறுமுகன். அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையன் அன்று அருணகிரிக்கும் பாடம் சொன்னான். எங்கே நாக்கை நீட்டு எனச் சொல்லி, வேலால் அருணகிரியாரின் நாவில் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை எழுதினான். அன்பனே! இறப்பதென முடிவுசெய்தாய். அப்போதும் உன் அன்னை முத்தம்மையை நீ மறக்கவில்லை. அவளை நினைத்தாய். அன்னையை நினைப்பவர்களும் அன்னையின் மனம்கோணாமல் வாழ்பவர்களும் என் அருளைப் பெறத் தகுதி உடையவர்கள்! என் அன்னை உமையம்மை கொடுத்த சக்திவேலால் உன் நாவில் பிரணவத்தை எழுதியிருக்கிறேன். இனி அற்புதமாகக் கவிதை பாடும் சக்தி உனக்கு வரும். இனி உன் நாவிலிருந்து பக்தித் தமிழ் பொங்கிப் பெருகும். எங்கே என் பக்தையான உன் அன்னை முத்தம்மையின் பெயரில் முத்து எனத் தொடங்கி ஒரு பாடல் பாடு! முருகப்பெருமான் அருணகிரியைப் பாடல் பாடப் பணித்தான். அருணகிரியின் நாவிலிருந்து தமிழ்க் கவிதை கங்கையெனப் பொங்கிப் பெருகத் தொடங்கியது. முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சக்திச் சரவண முக்திக்கொரு வித்துக் குருபர! என்ற முதல் திருப்புகழ்ப் பாடல் துள்ளிக் குதித்துக்கொண்டு புறப்பட்டது. அதை முழுமையாய்க் கேட்டு மனம் மகிழ்ந்த முருகன் அவருக்கு ஆசி வழங்கி மறைந்தான். கண்ணீரோடு தன் தம்பியின் உடலைத் தேடி ஓடோடிவந்த அக்கா ஆதி, தம்பி முற்றிலும் புதியவனாய் மாறியிருக்கும் அந்த அதிசயத்தைக் கண்டாள். தொழுநோய் நீங்கிய புது உடலைப் பார்த்து வியந்தாள். விழிகளைத் துடைத்துக் கொண்டாள். வீட்டுக்கு வருமாறு வேண்டினாள். அருணகிரியார் கனிவுடன் தமக்கையைப் பார்த்தார். அந்தப் பார்வையே அல்லவா மாறிவிட்டது! இப்போதைய அவர் பார்வையில் அருள் பொங்கியது.

அக்கா! நீ என் அக்கா மட்டுமல்ல. தாயும் கூட. அதுமட்டுமல்ல. நீ எனக்கு குருவும் ஆகிறாய். உன்னால் தான் முருக தரிசனம் பெற்றேன். தமிழ்ப் பாடல் பாடும் ஆற்றல் பெற்றேன். என்னை வீட்டுக்கு அழைக்காதே. நான் வீடுபேற்றை நாடும் மனநிலையில் இருக்கிறேன். உறவைத் துறந்து நான் துறவு பூண்டுவிட்டேன். இனி என் கால்கள் வீட்டுக்கு வராது. முருகனது ஆலயங்களுக்கே செல்லும். என் நா முருகன் திருப்புகழையே பாடும். எனக்கு ஆசி வழங்கு. தமக்கையும் தாயும் குருவுமான ஆதியைப் பணிந்தார் அருணகிரியார். தாய் முத்தம்மையின் இறுதி வேண்டுகோளை முருகன் நிறைவேற்றிவிட்டான் என உணர்ந்து ஆதி சமாதானமடைந்தாள். தம்பீ, நம் தாய் முத்தம்மையைப் போல் நானும் இனி முருக பக்தியில் ஈடுபட்டு முக்தியடைவேன்! என்றவாறே அவள் விழிகளைத் துடைத்துக் கொண்டு விடைபெற்றாள். அவ்வாறு குடும்ப பந்தம் முற்றிலுமாய்த் தன்னை விட்டு அகல அருணகிரியார் துறவியானார்.

 
மேலும் அருணகிரிநாதர் »
temple

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் ... மேலும்

 
temple

தன் தந்தை சிவன் நடத்திய திருவிளையாடல் போல் குமரன் தானுமொரு திருவிளையாடல் நடத்த முடிவுசெய்தான். ... மேலும்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.