பதிவு செய்த நாள்
22
ஜன
2020
05:01
ஓசூர்:ஓசூர் அருகே திம்மசந்திரம் சப்பளம்மா தேவி கோவில் மாடுகள் திருவிழாவில், 4 கோடி ரூபாய் அளவிற்கு மாடுகள் விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே, 200 ஆண்டு பழமையான திம்மசந்திரம் சப்பளம்மா தேவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாடுகள் திருவிழா நடப்பது வழக்கம். ஒரு ஜோடி மாடு, 5 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும். இந்த ஆண்டுக்கான மாடுகள் திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி, சப்பளம்மா தேவிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருவிழா துவங்கி வைக்கப்பட்டது. விழாவிற்கு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, தமிழகம், கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வருவர் என்பதால், இந்த ஆண்டு, 4 கோடி ரூபாய் அளவிற்கு மாடுகள் விற்பனை நடக்கும் என, விழா குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வரும், 26 வரை திருவிழா நடக்கிறது. கடைசி நாளில், 50 க்கும் மேற்பட்ட பல்லக்கு உற்சவம் நடக்கிறது. மேலும், கறி விருந்து சமைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கஜேந்திரமூர்த்தி, தியாகராஜ், அமரஷே் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.