சிறுவாக்கம், : சிவனுக்கு கோவில் கட்டும் பணியை, சிறுவாக்கம் கிராமத்தினரே மேற்கொண்டுள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம், சிறுவாக்கம் ஊராட்சியில், பழமை வாய்ந்த சிவலிங்கம் உள்ளது. இந்த சிவனுக்கு கூரை கிடையாது. மழையிலும், வெயிலிலும் சிவலிங்கம் வீணாவது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, கூரை இன்றி இருந்த சிவனுக்கு, நிழல் கொடுக்கும் பணி துவங்கியுள்ளது. சிறுவாக்கம் கிராம மக்களே ஒருங்கிணைந்து, சிவனுக்கு கோவில் கட்டும் பணியை துவக்கியுள்ளனர்.கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உள்ளதாக, கிராம பெரியோர் தெரிவித்தனர்.