நாகர்கோவில், :கன்னியாகுமரியிலுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வரும் 27-ம் தேதி வருஷாபிஷேகம் நடக்கிறது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் 22 கோடி ரூபாய் செலவில் இந்த கோயில் கட்டப்பட்டு கடந்த ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. வரும் 27-ம் தேதி வருஷாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார், நேற்று கன்னியாகுமரியில் ஆலோசனை நடத்தினார். இதில் தேவஸ்தானம் மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எஸ்.பி. ஸ்ரீநாத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.