திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம் கருட சேவை நடைபெற்றது.
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம் கடந்த, 21ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை இன்று நடந்தது. அதிகாலை, வீரராகவா, கோவிந்தா என்று பக்தர்களின் சரண கோஷத்துடன், கருடசேவை, கோபுர தரிசனம் நடைபெற்றது. பின், வீதி புறப்பாடு துவங்கியது. உற்சவர் வீரராகவர், ஈக்காடு கல்யாண வீரராகவர் கோவில் வரை சென்று, அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.