பதிவு செய்த நாள்
23
ஜன
2020
11:01
சென்னை: சகல தோஷ நிவர்த்தி, உபாதைகள் நீங்கவும், மக்கள் நலனுக்காகவும், அஷ்ட பைரவர், மகா பிரத்யங்கரா யாகம் மேற்கு மாம்பலம், அயோத்யா மண்டபத்தில் நாளை நடக்கிறது.
பூர்வ ஜென்ம பாவத்தின் கர்மவினைகள், முன்னோர் சாப, பாவங்கள், இயற்கை சீற்றங்கள், வன்முறை, வஞ்சகம் ஆகியவற்றால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதற்கு தீர்வாக, வேத சாஸ்திரங்களில் பலவிதமாக பூஜைகள், ஹோம வழிபாடுகள் கூறப்பட்டுள்ளன.மக்கள் நலன்அந்த வகையில், மக்கள் சகல நலனுக்காக, தை அமாவாசையான நாளை இரவு, சென்னை, மேற்கு மாம்பலம், அயோத்யா மண்டபத்தில், அஷ்ட பைரவர், பிரத்யங்கரா தேவி மகா யாகம் நடத்தப்படுகிறது.நாராயண அய்யர் நினைவு அறக்கட்டளை, அருளமுதம் வேத வித்யா குருக்குலம் ஆகியவை இணைந்து, ரமணி குருஜி, குமார் குருஜி ஆகியோர் ஆசியுடன், பரிகார ஜோதிடர் பார்த்தசாரதி தலைமையில் மகா யாகம் நடக்கிறது.பிரதான நிகழ்ச்சி, நாளை மாலை, 2:45 மணிக்கு மகா கணபதி பூஜையுடன் துவங்கி, யாகத்தில் மகா சங்கல்பம், கலச ஆவாஹனம், 108 சங்கு மண்டலம், பைரவர், பிரத்யங்கரா யந்திர, ஆயுத ஆவாஹனம் நடக்கிறது.108 சங்காபிஷேகம்மாலை, 6:00 மணி முதல் பொது சங்கல்பம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து அஷ்ட வடுக பூஜை, நவ கன்யா பூஜை, சுமங்கலி, சுஹாசினி பூஜை நடக்கிறது.இரவு, 8:30 மணிக்கு பைரவர், பிரத்யங்கரா ஹோமம் நடக்கிறது. பின், வஹோதாரா ஹோமம், மகா பூர்ணாஹூதி நடக்கிறது.இரவு, 10:45 மணிக்கு பைரவர், பிரத்யங்கரா விக்ரஹங்களுக்கு கலசம், 108 சங்காபிஷேகம்நடக்கிறது.மேலும்,
தகவல்களுக்கு ஜோதிடர் பார்த்தசாரதியின், 94442 56421 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.