Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதுகுளத்துார் முருகன் கோயிலில் ... திருச்செந்துார் கோயில் ராஜகோபுர வாசலை திறக்க வழக்கு திருச்செந்துார் கோயில் ராஜகோபுர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரியகோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரியகோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

28 ஜன
2020
11:01

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில், பிப்., 5ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, பூர்வாங்க பூஜையுடன் துவங்கியது. உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், 23 ஆண்டுக்கு பின், பிப்.,5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. டிச., 2ம் தேதி, கும்பாபிஷேகத்துக்கான பாலாலயம் நடந்தது. விமான கோபுரத்தில் உள்ள, 12 அடி உயர கலசம் புதுப்பிக்கப்பட்டு, 30ம் தேதி, மீண்டும் பொருத்தப்பட உள்ளது.

நேற்று காலை, பூர்வாங்க பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முன்னதாக, பெருவுடையார் சன்னதியில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, மங்கல வாத்தியம் முழங்க, பூர்வாங்க பூஜை நிகழ்ச்சிகள் துவங்கியது. தொடர்ந்து, 30ம் தேதி வரை, ஹோமம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும், 31ம் தேதி வெண்ணாற்றங்கரையிலிருந்து புனித நீர் கொண்டு வருதலும், பிப். 1ம் தேதியிலிருந்து 5ம் தேதி வரை, எட்டுகால யாகசாலை பூஜையும், 5ம் தேதி காலை, 9:30 மணியிலிருந்து, 10:30மணிக்குள், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

புதிய கொடிமரம் பிரதிஷ்டை: தஞ்சாவூர் பெரிய கோவிலில், ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட கொடிமரம், காலப்போக்கில் சேதமடைந்தது. மன்னர் இரண்டாம் சரபோஜியால், புதிய கருங்கல் பீடம் கட்டப்பட்டு, 1814ல், புதிய கொடி மரம் நிறுவப்பட்டது. இக்கொடி மரம் பழுதடைந்ததால், 2003ல், புதிய கொடி மரம் அமைக்கப்பட்டது. தற்போது கும்பாபிஷேகத்திற்காக, புனரமைப்பு செய்வதற்காக, கொடி மரத்தில் இருந்த பித்தளை கவசங்களை கழற்றியபோது, கொடிமரமும் சேதம் அடைந்திருந்தது, தெரிய வந்தது. இதையடுத்து, புதிய கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பழைய கொடி மரம், 17 ஆண்டுகளுக்கு பின், 12ம் தேதி அகற்றப்பட்டது. புதிய கொடி மரம் அமைப்பதற்காக, சென்னையிலிருநது, 9 லட்சம் ரூபாய் மதிப்பில், 40 உயர பர்மா தேக்கு வரவழைக்கப்பட்டது. புதிய கொடிமரம் வடிவமைத்து, நேற்று காலை பூஜைகள் நடத்தப்பட்டது. தீபாரதனைக்கு பின், பீடத்தில், கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், கலெக்டர் கோவிந்தராவ், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்திய தொல்லியல் துறை முதல்நிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் மற்றும் உபயதாரர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 2வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை ... மேலும்
 
temple news
நான்கு குணங்களை கொண்ட விக்ரஹத்தை வழிபடுவதன் வாயிலாக, நல்ல குணங்கள் பக்தர்களுக்கும் கிடைக்கும்,”என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar