பதிவு செய்த நாள்
30
ஜன
2020
11:01
சென்னை: வடபழநி முருகன் கோவிலில் பணிபுரியும் பணியாளர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு, பக்தர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்த, ஒரு நாள் மனிதநேயப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் நடந்து கொள்ளும் விதம், அவர்களுக்கு தேவையான சேவைகள் செய்வது குறித்து, அறநிலையத் துறை சார்பில், மனிதநேயப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, வடபழநி முருகன் கோவிலில், நேற்று காலை, 10:00 முதல், 1:00 மணி வரை மனிதநேயப் பயிற்சி அளிக்கப்பட்டது.இதில், வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் நந்தகுமார், சொற்பொழிவாளர் பாலஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்று, பக்தர்களிடம் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடந்து கொள்ளும் முறை குறித்து விளக்கினர். இந்தநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் துணை கமிஷனர் சித்ராதேவி செய்திருந்தார்.