கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் மடவிளாகம் காலனி பகுதியில் உள்ள அலமேலுமங்கா சமேத திருவேங்கட பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி, கடந்த 26ம் தேதி மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மகா பூர்ணாஹூதி யாகமும் நடந்தது.தொடர்ந்து காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.