விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்ஆர்., நகரில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. சுவாமிக்கு திருவாராதனம் செய்து சாற்றுமுறை வழிபாடு செய்யப்பட்டது. பஜனை மண்டலி நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் இருந்த வெங்கடாஜலபதிக்கு வருஷாபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், விஜயக்குமார் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்தனர்.