பழநி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2020 10:02
பழநி: பழநி தைப்பூச திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை, பரிவார தெய்வங்களுடன் கொடிப்படத்துடன் வெளிப்பிரகாரம் சுற்றி வரப்பட்டது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து காலை 10:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. முக்கிய நிகழ்வாக பிப்.7 ல் இரவு 7:30 மணிக்கு மேல் திருக்கல்யாணம், பிப்.8 ல் தைப்பூசத்தன்று மாலை 4:30 தேரோட்டம் நடக்கிறது. பத்தாம் நாளான பிப்.11 ல் இரவு 7:00 மணிக்கு தெப்ப உற்ஸவம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர். கொடியேற்றத்தில் சித்தநாதன் சன்ஸ் சிவனேசன், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து பங்கேற்றனர்.