ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மஹாசாந்தி ேஹாமத்துடன் வருஷாபிஷேக விழா துவங்கியது.
நேற்று காலை 8:00 மணிக்கு கோயில் மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். பாலாஜி பட்டர் தலைமையில், புண்யாகவாசனம், மஹாசாந்திேஹாமம் மற்றும் திருமஞ்சனம், திருவாராதனம் சாத்துமுறை, தீர்த்தகோஷ்டி நடந்தது.விழாவில் செயல் அலுவலர் இளங்கோவன், வாசுதேவபட்டர், வேதபிரான் சுதர்சன், மணியம் கோபி, ஸ்தானிகம் ரமஷே் மற்றும் பட்டர்கள், கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூன்று நாட்கள் நடக்கும் விழாவில், இன்று (பிப்.3) காலை 108 கலச திருமஞ்சனமும், நாளை (பிப்.4) விசஷே திருமஞ்சனம் மற்றும் லட்சார்ச்சனை நடக்கிறது.