பதிவு செய்த நாள்
03
பிப்
2020
10:02
உத்திரமேரூர்: வேடபாளையம், 20 அடி உயர ஜெய் ஆஞ்சநேயர் கோவிலில், மூன்றாம் ஆண்டு பால்குட உற்சவம் நடந்தது. உத்திரமேரூர், வேடபாளையத்தில், 20 அடி உயரத்தில், ஜெய் ஆஞ்நேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், தை மாத பால்குட உற்சவம், மூன்றாம் ஆண்டாக நடைபெற்றது. காலை, கணபதி பூஜை, கலச பூஜை நடந்தது. பின், உத்திரமேரூர் பணிமனை அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள், பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, அனுமனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.