Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பாபிஷேக விழா: பாதுகாப்பு ... தஞ்சை கும்பாபிஷேகத்திற்கு 300 அடி ஏணியுடன் அதிநவீன தீயணைப்பு வாகனம் தஞ்சை கும்பாபிஷேகத்திற்கு 300 அடி ...
முதல் பக்கம் » தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் 2020 » செய்திகள்
ராஜராஜேஸ்வரம் கும்பாபிஷேகம் காண தஞ்சையில் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ராஜராஜேஸ்வரம் கும்பாபிஷேகம் காண தஞ்சையில் குவியும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 பிப்
2020
10:02

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் நாளை (பிப்.,5ல்), கும்பாபிஷேகம் நடைபெறுவதால், பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலின் குடமுழுக்கு விழா, 23 ஆண்டுகளுக்கு பின், நாளை நடைபெறுகிறது. யாகசாலை பூஜையை காண, 1ம் தேதி முதல், பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கும்பாபிஷேக விழாவை காண, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் வர துவங்கிஉள்ளதால், தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டுஉள்ளது.

நாளை  (பிப்.,5ல்) அதிகாலை, 4:30 மணிக்கு, எட்டாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பர்ஸ்ஹூதி ஆகியவை நடைபெறவுள்ளது.காலை, 7:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி,தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரிதி, 7:25 மணிக்கு, திருக்கலசங்கள் எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர கும்பாபிஷேகம்; 10:00 மணிக்கு, பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு, 8:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெறுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மேலவீதி, வடக்குவீதி ஆகிய இடங்களில், மூன்று திருமண மண்டபங்களில் காலை, மாலை சிற்றுண்டியும், மதியம் உணவும் வழங்கப்படுகிறது.

அதே போல், சீனிவாசபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சிவாச்சாரியார்களுக்கும், மேலவீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஓதுவார்களுக்கும் தனித்தனியாக உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவு மாதிரிகளை, உடனுக்குடன் சோதனை செய்ய, 22 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தஞ்சை நகரில், 11 இடங்களில், பக்தர்கள் இளைப்பாறும் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மோர், பிஸ்கெட் ஆகியவற்றை வழங்கப்பட உள்ளது.பெரிய கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், தஞ்சை, எஸ்.பி., அலுவலகத்தில், தமிழக டி.ஜி.பி., திரிபாதி தலைமையில், நேற்று மாலை நடந்தது.

இதில், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் மற்றும் டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பிக்கள்., டி.எஸ்.பி.,க் கள் பங்கேற்றனர். பின், பஸ் நிலையங்கள், ரயிலடி, திலகர்திடல் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்ட, டி.ஜி.பி., திரிபாதி, தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

டி.ஜி.பி. திரிபாதி, நிருபர்களிடம் கூறியதாவது: கோவிலுக்கு வரக்கூடிய மக்களிடம், கெடுபிடி காட்டாமல், எளிமையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேக தினத்தன்று மட்டும், ஐந்து லட்சம் பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க, தயார் நிலையில் உள்ளோம்.கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில், 5,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15 பிரிவுகளாக, போலீசார் பிரிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் 2020 செய்திகள் »
temple news
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் கும்பாபிஷேகம், நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காலை, 9:23 மணிக்கு ... மேலும்
 
temple news
தஞ்சை: ஆயிரக்கணக்கான பக்தர்களின் "ஓம் நவச்சிவாய" கோஷம் விண்ணை பிளக்க, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக, 300 அடி உயர ஏணியுடன் கூடிய, அதிநவீன ஹைட்ராலிக் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவில், போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் ... மேலும்
 
temple news
தஞ்சை: தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம், 23 ஆண்டுகளுக்கு பிறகு, வரும், 5ம் தேதி நடக்கிறது. இதற்காக, 27ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar