பதிவு செய்த நாள்
08
பிப்
2020
11:02
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த நந்திவாடியில் 6 கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த நந்திவாடி கிராமத்தில் சித்தி விநாயகர், பழனி ஆண்டவர், நந்தீஸ்வரர், துர்கை அம்மன், முத்துமாரியம்மன் லட்சுமி நாராயண பெருமாள் ஆகிய 6 கோவில்கள் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 5ம் தேதி கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. 6ம் தேதி 2 மற்றும் 3ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜை துவங்கி பூர்ணாகுதி, யாத்ரா தானம் முடிந்து கடம் புறப்பாடாகி, 7:45 மணிக்கு சித்தி விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து நந்தீஸ்வரர், பழனி ஆண்டவர், துர்க்கை அம்மன், முத்துமாரியம்மன், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர், பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.