பதிவு செய்த நாள்
08
பிப்
2020
11:02
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி பொன்மலை கிராமத்தில் உள்ள, ஸ்ரீனிவாச பெருமாள் சுவாமி கோவிலின், மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த, 5 காலை, 5:30 மணிக்கு புண்ணியாவாசனம், மங்கள ஆரத்தி நடந்தன. காலை, 6:00 மணிக்கு பஞ்ச கவ்ய ஆராதனை, ரக்?ஷாபந்தனம், அக்னி பிரதிஷ்டை நடந்தன. மாலை, 5:00 மணிக்கு கும்ப ஆராதனை, உத்தஹோமம், தாதாதி மூல ஹோமம், விசேஷ ஹோமம், மஹாசாந்தி திருமஞ்சனம், மஹா மங்கள ஆரத்தி ஆகியவை நடத்தப்பட்டன. கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று காலை, 5:00 மணிக்கு, விஸ்வக்சேன ஆராதனை, புண்ணியாவாசனம் ஆகியவையும், 8:00 மணிக்கு கும்ப யாத்ரா தானம், கடம் புறப்பாடும், திருமலா - திருப்பதி தேவஸ்தான வைகானச ஆகம பண்டிதர்கள் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேக விழாவை நடத்தினர். தொடர்ந்து விஸ்வக்சேன ஆராதனை, அஷ்ட சத்வாரி ஜீவகளா ஆவாஹணம், கோபூஜை, மஹா நிவேதனம், மஹா மங்கள ஆரத்தி ஆகியவை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.