பதிவு செய்த நாள்
08
பிப்
2020
11:02
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா, இன்று கோலாகலமாக நடக்கிறது. தமிழ் கடவுளான முருக பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசமாகும். தை மாதத்தில் வரும் பவுர்ணமி, 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரமாக திகழும் பூசம் நட்சத்திரம் ஒன்றாக வரும் நாளே தைப்பூச விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளான இன்று, முருகப்பெருமான் கோவில்களில், விழா கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், சென்னிமலை, திண்டல், பச்சமலை, பவளமலை முருகன் கோவில் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், விழா நடக்கிறது. இதேபோல், ஈரோடு கொங்கலம்மன் கோவிலில், தை பூச விழா தேரோட்டம் இன்று நடக்கிறது. காலை, 8:45 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது.