பதிவு செய்த நாள்
10
பிப்
2020
10:02
விழுப்புரம்:கோலியனுார் அருகே நல்லரசன்பேட்டையில் உள்ள ஷீரடி சாய்பாபா தியான நிலையம் துவங்கி, ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.அதனையொட்டி, ஷீரடி சாய்பாபா சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஆவின் சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். துணைப் பதிவாளர் (பால் வளம்) சிவக்குமார், பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அரிகரன், கலியமூர்த்தி, பாலு, செந்தில், சீனு, கார்த்திகேயன், விஜயன், பாக்கியராஜ், சேட்டு, குண்டு, வீரப்பன், லதா, பிரேமா உட்பட பலர் பங்கேற்றனர்.வியாழக்கிழமை தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.