Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குடும்பத்தில் மகிழ்ச்சி மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அரசின் சலுகை மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)சந்தோஷச் சாரல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
16:39

குடும்பத்தினர் மீது பாசம் மிக்க கும்ப ராசி நேயர்களே!

சுக்கிரன், செவ்வாய், சனி, கேது மாதம் முழுவதும் நற்பலன் தருவர். முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் சிறக்கும். குருவால் மனதில் சந்தோஷச் சாரல் அடிக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குருவின் 7 மற்றும் 9 ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு.

கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். பிப்.29க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.  பெண்கள் புதனால் வீட்டினுள் இருந்த பிரச்னை, பொருள் இழப்பு முதலியன பிப்.21 க்கு பிறகு மறையும். உறவினரின் வருகை இருக்கும். குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை கூடும். பொறுமையும் நிதானமும் தேவை. வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர். அக்கம் பக்கத்தினரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். சூரியனால் உடல்நிலை பாதிக்கப்படலாம். பிப்.24,25ல் கண், வயிறு தொடர்பான உபாதை வரலாம்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு சூரியனால் பணவிரயம் ஏற்பட்டாலும் வருமானம் அதிகரித்தபடி இருக்கும். சனி,கேதுவால் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
* வியாபாரிகளுக்கு எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். போட்டியாளர்களை எதிர்த்து வெல்வீர்கள். தங்கம், வெள்ளி, வைரம் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் காண்பர்.
* தரகு, கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு அந்தஸ்து உயரும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருக்கிறது.
* அரசு வேலையில் இருப்பவர்கள் தடைகளை முறியடித்து வெற்றி காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.  கோரிக்கைகளை பிப்.29க்குள் கேட்டு பெறவும்.
* மருத்துவர்கள் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும்.
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரப் பெறுவர். வாடிக்கையாளர் மூலம் புதிய வழக்குகள் கிடைக்கும்.
* ஆசிரியர்களுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி விரைவில் கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் கூடுதல் நன்மை காண்பர். மேலதிகாரிகளிடம் நற்பெயர் ஏற்படும். கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசியல்வாதிகளின் கையில் அதிக பணம் புழங்கும்.  எதிர்பார்த்த பதவி கிடைக்கும். புகழ், கவுரம் மேலோங்கும்.
* கலைஞர்களுக்கு சுக்கிரனால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  பாராட்டு, புகழ் தேடி வரும்.
* விவசாயிகள் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவர். எள், கொள்ளு, துவரை, கொண்டைக்கடலை, நெல், மஞ்சள் மற்றும் பழம், கிழங்கு வகைகள் மூலம்  லாபம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு.  கைவிட்டு போன பொருள் கிடைக்கும். பக்கத்து நிலத்தின் வகையில் இருந்த பிரச்னை மறையும். கால்நடை வளர்ப்பில் வருமானம் உயரும்.  * கல்லுாரி மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். தேர்வில் மதிப்பெண் உயரும். ஆசிரியர்களின் அறிவுரை கை கொடுக்கும்.

சுமாரான பலன்கள்

* தனியார் துறையில் பணிபுரிபவர்கள்  வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணியிடத்தில் மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் அலைச்சல், சோர்வு ஏற்படலாம்.
* ஐ.டி., துறையினருக்கு வேலைபளு  அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற பலனை எதிர்பார்க்கலாம். அதிகாரிகளுடன் அனுசரித்து போவது நல்லது.  முயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.  
* பள்ளி மாணவர்களுக்கு புதன் சாதகமாக இல்லாததால் படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.

நல்ல நாள்: பிப். 16,17,18,19,20,23,24,25,28,29 மார்ச் 6,7,8,9
கவன நாள்: பிப்.13, மார்ச்10,11 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,3,5 நிறம்: மஞ்சள், நீலம்

பரிகாரம்:
* ஞாயிறன்று ராகுகால பைரவர் வழிபாடு
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* திங்களன்று சிவனுக்கு வில்வார்ச்சனை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருப்பதி : கொரோனா தொற்றிலிருந்து ஊழியர்களை காப்பாற்ற, ஐந்து விதமான ஆயுர்வேத மருந்துகளை, திருமலை ... மேலும்
 
temple
துாத்துக்குடி :முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய ... மேலும்
 
temple
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னிமடையில் வெளியாட்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க, ... மேலும்
 
temple
சபரிமலை : சபரிமலை பக்தர்கள், தங்கள் வழிபாடுகளை நிறைவேற்ற, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை, தேவசம் ... மேலும்
 
temple
மைசூரு: கொரோனா வைரஸ் உருவாகி பரவுவதற்கு முன்பே, உலகிற்கு ஆபத்து என, எச்சரிக்கை விடுத்த, இளம் ஜோதிடர், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.