பதிவு செய்த நாள்
12
பிப்
2020
11:02
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே இராகுவையன்வலசு பகவதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 6 40 மணிக்கு மேல் நடக்கிறது.
பிப் 10 ம் தேதி திங்கட்கிழமை மங்கல இசை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி, வாஸ்து சாந்தி, திரவியாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை யாகசாலை அலங்காரம், தீர்த்சங் கிரஹணம், புனித தீர்த்தம் சேர்த்தல், மாலை 4.35 மணிக்கு மங்கல இசை திருமுறைப்பாராயணம், விநாயகர் வழிபாடு, முளைப்பாலிகை , பூஜை, காப்பு கட்டுதல், பூர்வாங்க பூஜைகள், கலாகர்ஷணம், முதற்கால யாக பூஜை துவக்கம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, அக்னிகாரியம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை.நடந்தது. தொடர்ந்து புதன்கிழமை இன்று காலை 5 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்கி பிம்பசுத்தி, பிம்பரக்ஷாபந்தனம், நாடிசந்தானம், உயிரூட்டுதல், இன்று காலை 6.40 மணிக்கு யாத்ராதானம், கலசங்கள் ஆலய வலம் வருதல், 6.50 மணிக்கு ஸ்ரீவிநாயகர் மகா கும்பாபிஷேகம், காலை 7.10 மணிக்கு ஸ்ரீ பகவதி அம்மன் கோபுர விமான மகா கும்பாபிஷேகம் . தொடர்ந்து ஸ்ரீ பகவதி அம்மன் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9.15 மணிக்கு தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்கார,அர்ச்சனை மகா தீபாராதனை, பிரசாதம் வாங்குதல். காலை 7.30 மணி முதல் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பெரிய வீட்டுக்காரர் சிவசாமி, விழாக்குழுவினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சிறப்பாகசெய்து வருகின்றனர்.