பரமக்குடி: மகா சிவராத்திரி விழாவையொட்டி வெள்ளையங்கிரி ஈஷா யோகா மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் பரமக்குடிக்கு வந்தது.
பிப்., 21 ல் மகா சிவராத்திரி விழாவை வரவேற்கும் விதமாக, ஜன., 1 ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து ஆதியோகி ரதம் புறப்பட்டது. இதன்படி ரதம் பரமக்குடி வருகை புரிந்ததையொட்டி மணி நகரில் முன்னாள் தாசில்தார் பரமசிவம் வரவேற்றார். தொடர்ந்து ஒட்டப்பாலம் வழியாக ரதம் சென்று முத்தாலம்மன் கோவில் முன்பு பக்தர்கள் வழிபாடு செய்தனர். அங்கு ஆயிரவைசிய சபை தலைவர் போஸ், முத்தாலம்மன் கோயில் டிரஸ்டிகள் பாலசுப்ரமணியன், ரவீந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பெரிய பஜார், காந்தி சிலை ஆர்ச் வழியாக, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்றது. அப்போது ஏராளமான பொதுமக்கள் ஆதியோகி சிவனை வழிபட்டுச் சென்றனர். ரதம் ராமேஸ்வரம் வரை சென்று மீண்டும் பிப் , 18 ம் தேதி வெள்ளியங்கிரி ஈஷா யோக மையம் சென்றடையும்.