பதிவு செய்த நாள்
12
பிப்
2020
12:02
விருத்தாசலம்: விருத்தாசலம் செல்லியம்மன் கோவிலுக்கு, பால்குடம், தீச்சட்டி சுமந்து, விமான அலகு அணிந்து கிரேனில் தொங்கியபடி பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் உள்ள செல்லியம்மன் கோவில் செடல் திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் கடந்த வாரம் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று முக்கிய நிகழ்வாக, பகல் 11:30 மணிக்கு மேல், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி சுமந்தும், செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதில், விமான அலகு அணிந்த பக்தர்கள் ராட்சத கிரேனில் தொங்கியபடி வந்து, பரவசம் ஏற்படுத்தினர். தொடர்ந்து, செல்லியம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகம், ஆராதனை நடந்தது. இதற்காக பக்தர்கள் விநாயகர், முருகன், சிவன், பார்வதி உள்ளிட்ட சுவாமிகளின் வேடமணிந்து வந்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.