நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2020 03:02
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி மற்றும் நித்திய கல்யாண பெருமாள் தேவஸ்தானம் உட்பட்ட நித்திய கல்யாண பெருமாள் கோவில் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா மற்றும் பிரம்மோற்சவ திருவிழா, கருடசேவை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக பிரம்மோற்சவ விழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று(பிப்.,12) கோவில் வளாகத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் முன்னதாக அந்த முகூர்த்த பந்தக்காலுக்கு பல்வேறு திரவங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.