பதிவு செய்த நாள்
13
பிப்
2020
01:02
காஞ்சிபுரம்: தமிழக தொல்லியல் துறையுடன், சென்னை ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இணைந்து, கல்லுாரியில், தமிழ் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தொல்லியல் களம் சார்ந்த புரிதலை ஏற்படுத்தும் வகையில், பழமையான கல்வெட்டு உள்ள கோவில்களுக்கு, கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதன்படி, 120 மாணவ - மாணவியர், நேற்று, காஞ்சிபுரம் வந்தனர். காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம், வைகுண்ட பெருமாள், கைலாசநாதர், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்றனர்.தொடர்ந்து, திருமுக்கூடல், சாஸ்திரம்பாக்கத்தில் அகழாய்வு இடங்களை பார்வையிட்டனர். கோவில்களில் உள்ள கல்வெட்டு, ஓவியம், சிற்பம், அகழாய்வு குறித்து, தமிழக தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர்கள் ஸ்ரீதரன், பாக்யலட்சுமி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் வீரராகவன், வெற்றிமாறன், சங்கரா கல்லுாரி தமிழ்பேராசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் ஆகியோர், மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.