செஞ்சி:செஞ்சி அடுத்த மொடையூர் கிராமத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா, திருத்தொண்டர் குருபூஜை விழா நடந்தது. அதனையொட்டி, மாலை 6:00 மணிக்கு வட புத்துார் சைவநெறி திருத்தொண்டர் இளஞ்செழியன் சுவாமிகள் குழுவினரால் கணபதி வேள்வியும், திருத்தொண்டர் தொகையும் நடந்தது. தொடர்ந்து வரசித்தி விநாயகருக்கு கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்தது.விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.