மகாலட்சுமிக்கு உகந்தது உப்பு. சமுத்திரராஜனின் மகளான மகாலட்சுமி கடலில் தோன்றியவள். இதனால் தான் கடலில் விளையும் உப்பை மகாலட்சுமியின் அம்சம் என்கிறோம். இதனடிப்படையில் கிராமப்புறங்களில் மாலை வேளையில் உப்பை கடனாக கொடுக்க மாட்டார்கள். கிரகப்பிரவேசம் செய்யும் போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமென்பதற்காக உப்பு எடுத்துச் செல்லும் வழக்கம் உள்ளது. ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பர். உப்பில்லாத உணவை எப்படி சாப்பிட முடியாதோ அது போல மகாலட்சுமியின் அருள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்பதே இதன் தத்துவம்.