வாலாஜாபாத்: அகத்தியருக்கு, 21ல் குரு பூஜை நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆல மரத்தின் கீழ், அகத்தியருக்கு தனி சன்னிதி உள்ளது. அங்கு, பிப்ரவரி, 21ல், அகத்தியர் குரு பூஜை விழா நடைபெற உள்ளது. இப்பூஜை முன்னிட்டு, சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது. அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.