பதிவு செய்த நாள்
22
பிப்
2020
10:02
ஊட்டி: ஊட்டி காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.ஊட்டி அடுத்துள்ள காந்தளில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. ஆண்டு தோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு விழா, 20ம் தேதி திருவிளக்கு பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, மஹா பிரதோச பூஜை நடந்தது.மகா சிவராத்திரி விழாவான நேற்று, காலை, 7:00 மணிக்கு கால சாந்திபூஜை, காலை, 11:00 மணிக்கு உச்சி கால பூஜை, 11:30 மணிக்கு அன்னதானம் நடந்தது. அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.பகல், 2:00 மணிக்கு, மூலவருக்கு, சிறப்பு அலங்காரத்துடன், விக்னேஸ்வர பூஜை, மஹாயாக பூஜை, மகா பிரதோஷ அபிஷேகம் நடந்தது. மாலை, மகா தீபாராதனையை தொடர்ந்து, சுவாமி ஆலயம் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலை, 6:00 மணியில் இருந்து பரத நாட்டியம் நிகழ்ச்சி, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், நீலகிரியை தவிர, சமவெளி பகுதிகள்; கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.