விழுப்புரம் : விழுப்புரம் பூந்தோட்டம் வாலாம்பிகை உடனுறை ஆதிவாலீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழா நடந்தது.விழாவையொட்டி, ஆதிவாலீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் நான்கு கால பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்றிரவு 9:00 மணியளவில், 1008 சங்காபிஷேகம் நடந்தது. பின், இன்று 22ம் தேதி காலை 5:00 மணியளவில் கோ பூஜை நடந்தது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.