சாயல்குடி:சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிற வல்லியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதோஷ விழா நடந்தது.மூலவர், நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் பிரதோஷப் பாடல்கள், சிவநாம அர்ச்சனை, நாமாவளி உள்ளிட்டவைகளை பாடினர். சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.