முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே ஆத்திகுளம் கிராமத்தில் வீர மாகாளியம்மன் கோயிலில் மாசி களரி சிவராத்திரியை முன்னிட்டு பால்குட திருவிழா நடந்தது. கிராம மக்கள் 15 நாட்களாக காப்பு கட்டி விரதம் இருந்தனர். பக்தர்கள் முளைக்கொட்டு திண்ணையில் இருந்து பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கிராம மக்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மன் கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைகள் நடந்தது.